மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (செப்.11) டெல்லி பயணமாகி, பாஜக உயர்மட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தமிழக தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், அந்த முடிவு டெல்லியில் உறுதியாகும் எனவும் பேச்சுக்கள் வலுத்துள்ளன. இந்த தகவல் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “நான் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியமே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அப்படியான சூழலில் நான் ஏன் விலக வேண்டும்?” எனத் தெரிவித்தார். இது மூலம், பதவியிலிருந்து விலகும் வகையிலான செய்திகள் வதந்தி மட்டுமே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
