டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கடைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன என்ற அடிப்படைத் தகவலைக் கூட பொதுமக்களுக்குத் தெரிவிக்க இந்த அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரசின் இந்த ரகசியப் போக்கு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையே காட்டுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கடந்த காலங்களில் டாஸ்மாக் பாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டதையும், அப்போது நிகழ்ந்த துயரச் சம்பவங்களையும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது.
டாஸ்மாக்ல எத்தனை கடை இருக்குன்னு சொல்ல கூட முடியாத இன்றைய அரசு, எப்படி Transperency-ஆக இருக்கும் என மக்கள் நம்புவார்கள்?
டாஸ்மாக் நிறுவனம் பற்றிய உண்மை தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள கூடாதா?
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாட்டெல்லாம் பாடி, அன்று 41 உயிர்கள் போனது எல்லாம்… pic.twitter.com/wtKGZKoJAh
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 11, 2026
தற்போதைய ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 20 ரூபாய் வரை சட்டவிரோதமாக வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் விஜய் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றும், இந்த முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கு எப்போது முறையான பதில் கிடைக்கும் என்றும் அந்தப் பதிவில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
