தமிழக வெற்றி கழகத்தினர் அண்மைகாலமாக மேடைகளில் பேசி வரும் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்ற தத்துவத்திற்கு எதிராக திமுக அமைச்சர் கீதா ஜீவன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது புதிதாக அரசியல் பேசி வருபவர்கள் மேடைகளில் வசனம் பேசுவதை விடுத்து, கடந்த காலங்களில் தாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று சாடியுள்ளார்.

​திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்மையான ஆட்சியைப் பற்றி விமர்சிப்பவர்கள், முன்பு எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் முதலமைச்சரின் பின்னாலேயே ‘சிஎம் சார்… சிஎம் சார்…’ என்று கூவித் திரிந்தவர்கள், இப்போது திடீரென வந்து சமூக ஒழுக்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையாகவும், முரண்பாடாகவும் இருக்கிறது என்று கூறி, தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நெத்தியடி கொடுத்துள்ளார்.