சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்திருக்கிறது. செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் திடீரென சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்ததால், மீண்டும் விலை அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்களில் அச்சம் நிலவியது. ஆனால் அதற்கு மாறாக, தற்போது 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.10,150-க்கும், 1 சவரனுக்கு ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை ஏற்றத் தாழ்வில்லாமல் இருப்பதால், நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.