தமிழகத்தில் திமுக கூட்டணியில் அடுத்தடுத்து பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தற்பொழுது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குழப்பங்கள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சி தேர்தல் கூட்டணி தற்போதைக்கு இல்லை என்று அறிவித்திருந்த சூழலில், தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது மாநிலக் குழு கூட்டத்தில் “எந்தக் கூட்டணியிலும் இல்லை” என்ற முக்கிய முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இடதுசாரி கட்சிகள் அடுத்தடுத்து திமுக கூட்டணியை விட்டு கழன்றுகொண்டு வெளியேறும் இந்த அதிரடி அரசியல் நகர்வு, வரும் இடைத்தேர்தல் நேரங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.