திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த கொடூர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ராஜமுரளி, ரக்ஷித் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய மூன்று மாணவர்கள் இன்று மாலை பள்ளி முடிந்து தங்களது வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரின் வேகம் தாங்காமல் தூக்கி எறியப்பட்ட மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், “உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு அரசு என்றும் துணையாக இருக்கும்” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.