இரண்டு முறை விவாகரத்து பெற்று, அதன் மூலம் 2 கணவர்களிடம் இருந்து கோடி கணக்கில் ஜீவனாம்சம் பெற்ற பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விவாகரத்து சட்டங்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த புதிய விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் வீடியோ தகவல்களின்படி, பொறியியல் மற்றும் எம்பிஏ (MBA) முடித்துள்ள அந்த இளம் பெண்ணிற்கு ஏற்கனவே முதல் திருமண முறிவு ஏற்பட்டு, அதன் மூலம் முதல் கணவரிடமிருந்து 20 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்துகொண்ட இரண்டாவது திருமணமும் வெறும் 18 மாதங்களிலேயே முறிவடைந்துள்ளது. இதனால் இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவெடுத்த நிலையில், இரண்டாவது விவாகரத்துக்காக அந்தப் பெண் நீதிமன்றத்தில் கேட்ட ஜீவனாம்சத் தொகைதான் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாயடைக்க வைத்துள்ளது.

லக்ஷ்யா மேத்தா என்பவரது எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த நீதிமன்ற வீடியோவில், அந்தப் பெண் தனது இரண்டாவது கணவரிடமிருந்து ஒட்டுமொத்த தொகையாக (One-time settlement) 12 கோடி ரூபாய், ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) கார் மற்றும் மாதாந்திர பராமரிப்புச் செலவாக 5 லட்ச ரூபாய் என அதிரடியாகக் கோரியுள்ளார்.

ஆனால், நீதிமன்றம் அவரது முழு கோரிக்கையையும் ஏற்காமல், இறுதியாக 4 கோடி ரூபாயை ஒரே தவணையாக வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “வெறும் 18 மாத வாழ்க்கைக்கு 12 கோடி கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ஜீவனாம்ச சட்டங்களை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஒரு தரப்பினரும், “இதில் அந்தப் பெண்ணின் மீது எந்தத் தப்பும் இல்லை, சட்டப்படியான தனது உரிமையைத் தான் அவர் கேட்டுப் பெற்றுள்ளார்” என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதள