மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் உள்நாட்டுப் பூசலையும் பிளவுளையும் சந்தித்து வருகிறது.
2026 தேர்தலில் 80 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 60 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாகப் பிரிந்து, ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து மம்தாவுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தனர்.
இதற்குக் குறையாமல், கட்சியின் 28 எம்.பி.க்களில் 20 பேர் இந்த அதிருப்தி அணிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 13 மாநிலங்களவை உறுப்பினர்களில் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது மம்தாவின் தலைமையை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், மூத்த தலைவரும் எம்.பி.யுமான கல்யாண் பானர்ஜி விடுத்துள்ள கருத்து மம்தா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா தனது குடும்ப வாரிசான அபிஷேக் பானர்ஜியுடன் இருக்கப் போகிறாரா அல்லது கட்சியுடன் இருக்கப் போகிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இருவரில் ஒருவரை மம்தா தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாகக் கூறியிருப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இத்தனை இடியாப்பச் சிக்கல்களையும் சமாளித்து, பிளவுபட்டுள்ள கட்சியை மம்தா பானர்ஜி மீண்டும் ஒன்றிணைப்பாரா அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தனது செல்வாக்கை முழுமையாக இழக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
