உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்மான் என்ற மாப்பிள்ளை, தனது திருமணத்திற்குப் பாரம்பரிய குதிரை வண்டியைத் தவிர்த்துவிட்டு புல்டோசர் (JCB) வாகனத்தின் மேல் ஏறி மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் புல்டோசரின் மேல் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடிப்பதும், அவரோடு ஒரு டஜனுக்கும் மேற்பட்ட உறவினர்கள் நகரும் அந்த வாகனத்தின் மீது ஏறி நடனமாடுவதும் போன்ற வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலானது.

​பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிகளை மீறியும் செயல்பட்ட இந்த வீடியோ காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாகச் செயல்பட்ட காந்த் பகுதி போலீஸார், அந்த ஜேசிபி வாகனத்தைக் கண்டறிந்து, விதிகளை மீறிய மாப்பிள்ளை தரப்பு மீது அபராதம் (Challan) விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸுக்காக பில்டப் செய்யப் போய், கல்யாணம் முடிந்த கையோடு மாப்பிள்ளைக்கு போலீஸ் சலான் வந்து சேர்ந்துள்ளது.