வருமானத்தைப் பெருக்குவதற்காகப் பல்வேறு புதிய வழிகளை மக்கள் தேடி வரும் நிலையில், ஒருவரது நீச்சல் குளம் மூலம் அவர் சம்பாதிக்கும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜா என்ற கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர் தனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த நீச்சல் குளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துத் தெரிந்து அதிர்ந்து போயுள்ளார்.

அந்த நண்பரின் கணக்குப்படி, கோடைகால சீசனில் தினமும் சராசரியாக 750 பேர் நீச்சல் குளத்திற்கு வருவதாகவும், நுழைவுக்கட்டணமாக தலா 100 ரூபாய் வசூலிப்பதன் மூலம் மாதத்திற்கு சுமார் 22.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீசன் முடிந்த பிறகும்கூட, தினமும் 250 பேர் வருவதால் மாதத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீச்சல் குளத்தைப் பராமரிக்க ஒரு காவலருக்கு 20,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகவும், நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை மாற்றும்போது அதை வீணாக்காமல் விவசாயிகளுக்குச் செடிகளுக்கு ஊற்றுவதற்காக விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“>

 

எனினும், இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கலந்த நீர் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்றும், பகிரப்பட்ட புகைப்படத்தில் நீச்சல் குளம் காலியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் சந்தேகங்களை முன்வைக்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், இந்த வித்தியாசமான வருமான வழி குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.