மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் அனுபவிப்பதற்கு வயது ஒரு தடடையே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக, 80 வயதில் தனது வாழ்நாளில் முதன்முறையாகக் கடலைப் பார்த்த முதியவர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.
வாழ்க்கையின் இறுதிப் பருவத்தில் இருக்கும் அந்த தாத்தா, பரந்து விரிந்த கடலையும் அதன் பேரலைகளையும் கண்டதும் வெளிப்படுத்திய குழந்தைத்தனமான அலாதி சந்தோஷம், இணையவாசிகளின் மனதை அப்படியே உருகவைத்துள்ளது. தூய்மையான மகிழ்ச்சிக்கு எல்லைகளோ, வயது வரம்போ கிடையாது என்பதை இந்த வீடியோ உலகிற்கு மீண்டும் ஒருமுறை அழகாக உணர்த்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், 80 வயதான அந்த முதியவர் கடற்கரையில் நின்றபடி, தன் கால்களை நனைக்கும் அலைகளைப் பார்த்துப் பூரிப்பில் திளைக்கிறார். பேரலைகள் கரையை நோக்கி வரும்போது ஒரு சிறு குழந்தையைப் போலக் கைகளைத் தட்டிச் சிரிப்பதும், கடலின் அழகை வியப்பு மாறாமல் பார்த்து ரசிப்பதும் பார்ப்போரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது.
வாழ்நாளின் பெரும்பகுதியை உழைப்பிலும் குடும்பப் பொறுப்புகளிலுமே கழித்த அந்த தாத்தாவிற்கு, இந்த முதல் கடல் பயணம் அவரது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவமாகவும், அளப்பரிய பேரானந்தத்தைக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
இணையத்தில் தீயாகப் பரவி வரும் இந்த நெகிழ்ச்சியான பதிவைப் பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், “மகிழ்ச்சிக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு இந்த தாத்தாதான் சிறந்த உதாரணம்” என்றும், “ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இதுபோன்ற தருணங்கள் அமைய வேண்டும்” என்றும் தங்களின் வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நம் வீட்டிலிருக்கும் முதியவர்களின் சிறிய சிறிய ஆசைகளை நிறைவேற்றுவது எவ்வளவு பெரிய மனநிறைவைக் கொடுக்கும் என்பதை இந்த அழகிய வீடியோ அனைவருக்கும் உணர்த்துகிறது.
आनंदाच्या क्षणांना वयाचे बंधन नसते! ८० वर्षानंतर पहिल्यांदा समुद्र पाहिल्यावर आजोबांनी कशी रिॲक्शन दिली बघाच; VIDEO व्हायरल https://t.co/1AcBnoR3W2 via @loksattalive
“>
