பெட்ரோல் பங்க்குகளுக்குச் செல்லும்போது ஊழியர்கள் “சார், முதல்ல ஜீரோவை பாத்துக்கோங்க” என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். பலர் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கடந்து விடுவர், ஆனால் அவசரத்தில் இருப்பவர்களையும், மொபைல் போனில் பிஸியாக இருப்பவர்களையும் குறிவைத்து பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் ஒரு பகீர் மோசடி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கீதம் ரோட்டில் உள்ள கிருஷ்ணா பெட்ரோல் பங்க்கில் இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது.
அங்கு பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், பெண் ஊழியர் ஒருவர் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். கேஷ்ஷாகத் தருகிறீர்களா அல்லது ஆன்லைனா எனக் கேட்டு வாடிக்கையாளரை பேச்சில் மூழ்கடித்த அந்த ஊழியர், மீட்டரை முழுமையாக ஜீரோவிற்கு மாற்றாமல், ஏற்கனவே அதில் இருந்த 200 ரூபாயை அப்படியே விட்டுள்ளார். வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்ட நிலையில், மீட்டரில் 500 என்று வந்ததும் வண்டியை எடுத்துக்கொள்ளச் சொல்லியுள்ளார்.
लोग कहते हैं महिलाएं ईमानदार होती हैं अगर इनको मौका मिले तो ऐसा चौका लगातीं हैं कि जिंदगी भर याद रहता है, देखा बिना जीरो किए 200 से स्टार्ट करके 500 का तेल भर दिया, यानि कि 1 मिनट में 200 कमा लिए। pic.twitter.com/tg6NVXgfLf
— Anuj Agnihotri Swatntra (@swatntra_anuj) June 9, 2026
ஆனால், உண்மையில் வண்டியில் வெறும் 300 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அந்த வாடிக்கையாளர் ஒரு கன்டென்ட் கிரியேட்டர் என்பதால், அவரது பைக்கில் இருந்த ‘இன்ஸ்டா 360’ கேமராவில் இந்த முழு மோசடியும் அக்குவேறாகப் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகி பங்க் ஊழியர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளது.
