தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்ற போது கூட்ட நெரிசல் காரணமாக கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர். இன்னும் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை ஒரு நாள் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை மாலை 6:00 மணி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ள நிலையில் அத்யாவசிய தேவைகளுக்காக மெடிக்கல் மற்றும் பால் உள்ளிட்ட கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.