தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த துயர சம்பவத்தில் பலர் தங்கள் சொந்தங்களையும் உறவினர்களையும் இழந்து கதறும் காட்சிகள், கரூரை மட்டுமல்ல நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று தாமரைக்கண்ணன் என்பவர் சென்றுள்ளார்.

இவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இவரது மனைவி தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார். தன்னுடைய கணவனின் மரண செய்தியை கேட்டு அந்தப் பெண் கதறி துடித்த நிலையில் உறவினர்கள் அவரை தூக்கிக் கொண்டு வந்தது அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் இதில் உயிரிழந்த தாமரைக்கண்ணன் (26) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். மேலும் தன்னுடைய கணவனை இழந்து நிறைமாத கர்ப்பிணி கதறிய துடித்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.