தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பின்னர் கரூருக்கு கிளம்பினார். அவர் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு கிளம்பிய பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர். இன்னும் பலர் மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த விசாரணை குழு அமைத்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
அதாவது பிரச்சார கூட்டத்தின் போது கற்கள் வீசப்பட்டது எனவும் சதி நடத்தப்பட்டுள்ளது எனவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவசர வழக்காக விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். இதனை அவரது பாதுகாவலர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
விஜய் மீது செருப்பு வீச்சு
கரூரில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் மீது மர்மநபர் ஒருவர் செருப்பை வீசியதால் பரபரப்பு#tvklive #TVKVijay #VijayCampaign #TVKCampaign #TamilagaVettriKazhagam #Ungavijaynavaren #உங்கவிஜய்நாவரேன் #tvkkarur #karur pic.twitter.com/j0ziJVj66Y
— TNTalks (@tntalksofficial) September 27, 2025
