தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) August 5, 2025
“>
மாநாட்டுக்கான காவல்துறை பரிந்துரைத்த தேதிகளில் ஒன்றாக தேர்வு செய்ததன் பின்னர், தற்போது கட்சி சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட அனுமதி அளித்த ஒரு பகுதியில் மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் தலைமையிலான த.வெ.க. தனது இரண்டாவது முக்கியமான அரசியல் மாநாட்டை நடத்த தயாராகியுள்ளது.
