வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், 14 பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியான 58 வயது பெண்மணி ஒருவர், பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தனது 55-வது வயதில் தற்செயலாக உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற இவர், அங்கு பளுதூக்கும் பயிற்சியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார். பொதுவாக வயது முதிர்வின் காரணமாகப் பலரும் தங்களது உடல் ஆரோக்கியத்தில் சுணக்கம் காட்டும் நிலையில், இந்தத் தள்ளாத வயதிலும் கடினமான எடைகளைத் தூக்கி இவர் செய்யும் வொர்க்அவுட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Eileen White (@eileenjwrn)

உடலின் முதுமையைத் தடுத்து, என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதைத் தனது விடாமுயற்சியால் இவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார். “தற்செயலாகத் தொடங்கிய இந்த உடற்பயிற்சிப் பயணம், இப்போது எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது” என்று பெருமிதத்துடன் கூறும் இந்தப் பாட்டி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளார். வயது முதிர்வைக் காரணம் காட்டி முடங்கிவிடாமல், எதையும் சாதிக்கலாம் என்ற இவரின் தன்னம்பிக்கை கலந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.