அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குத்துச்சண்டை போட்டியை முன்னிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தினர் புதிய அதிகாரப்பூர்வ நினைவு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் இப்படி ஒரு தொழில்முறை விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். டிரம்பின் மகன்களான டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரால் நடத்தப்படும் ‘டிரம்ப் ஆர்கனைசேஷன்’ நிறுவனம் இந்த பிரம்மாண்ட வணிக முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சேகரிப்பு நாணயங்களின் விலையானது, அதன் பிரீமியம் தங்கப்பதிப்பிற்கு அதிகபட்சமாக 11,999 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுதற்போது பிரத்யேக இணையதளம் மூலம் விற்கப்பட்டு வரும் இந்த நாணயங்கள், ஜனாதிபதி டிரம்ப் அவர்களால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ நாணயங்கள் இவை மட்டுமே என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.