2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பேசினார்.
அதில், “முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இலவச லேப்டாப் திட்டத்தை அமல்படுத்தினோம். தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, வருகிற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் தொடங்கி தரப்போவதாக உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு மாணவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
