இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்யும் ஆபத்தான காட்சி பதிவாகியுள்ளது.
அந்த நபர் தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது லேப்டாப்பைத் திறந்து வைத்து, ஒரு கண் சாலையில் இருக்க, மற்றொரு கண்ணால் லேப்டாப் திரையைப் பார்த்தபடி பைக்கை ஓட்டிச் செல்கிறார். அவருக்கு அப்படி என்ன வேலை நெருக்கடியோ தெரியவில்லை, ஆனால் இந்த விபரீத செயல் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
सड़क पर एक ऐसा नज़ारा देखा जिसे देखकर रोंगटे खड़े हो गए।
लोग वर्कहोलिक होने के चक्कर में ये भूल रहे हैं कि जिंदगी दोबारा नहीं मिलेगी।
क्या कुछ मिनटों का काम, आपकी जान से ज्यादा कीमती है? अगर सुरक्षित घर पहुंच गए, तभी तो करियर काम आएगा। pic.twitter.com/ftPRQf3ORo
— Indrajeet Nishad (@NishadIndra1) June 12, 2026
எக்ஸ் (X) தளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர் ஒருவர், “சாலையில் இந்த காட்சியைப் பார்த்தபோது என் உடம்பே நடுங்கிவிட்டது; வேலை வெறி பிடித்தவர்கள் வாழ்க்கை மீண்டும் கிடைக்காது என்பதை மறந்துவிடுகிறார்கள். சில நிமிட வேலை உங்கள் உயிரை விட மதிப்புமிக்கதா? பத்திரமாக வீடு திரும்பினால் தானே இந்த கேரியர் உதவும்!” என்று மிக உருக்கமாகக் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைச் பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த வாலிபரின் அலட்சியப் போக்கைக் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். “அவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செய்யலாமே”, “இது வேலை வெறி அல்ல, அவரே வம்படியாக மரணத்தை அழைக்கும் செயல்” என்றும், “சிறிய தவறு நடந்தாலும் பெரிய விபத்தில் முடியும்” என்றும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
