சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,19,360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,276 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.