சிபிஐ மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகர் ரெட்டி (83) நேற்று (ஆக.22) நள்ளிரவு காலமானார். வயது மூப்பினால் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுதாகர் ரெட்டி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல ஆண்டுகளாக செயற்பட்ட மூத்த தலைவர் ஆவார். அவர் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசியல் துறைக்கும் பெரிய இழப்பாகும் என்று தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
