உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த சமந்த்ரா என்ற பெண், அருவருப்பான அதிர்ச்சி தரும் செயலில் ஈடுபட்டது வீடியோவில் பதிவாகி கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.
சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தபோது, சிறுநீர் கழித்து அதை பாத்திரங்களில் தெளித்ததாகக் கூறப்படும் அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோ வெளிவந்த உடனே நாகினா போலீசார் அவரை கைது செய்ததாக SHO சஞ்சய் குமார் தெரிவித்தார்.
குடும்பத்தினர் சில நாட்களாக அவளின் நடத்தை சந்தேகத்துக்கிடமாக இருந்ததால், ரகசிய கேமரா பொருத்தியதில் இந்த வெட்கக்கேடான செயல் வெளிச்சத்திற்கு வந்தது. பத்து வருடங்களாக நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட பணிப்பெண் இவ்வாறு நடந்துகொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்தது.
गाजियाबाद के बाद बिजनौर में भी दोहराई गई घिनौनी हरकत, नौकरानी गिरफ्तार
➡️यूपी के बिजनौर जिले में एक चौंकाने वाला मामला सामने आया
➡️घरेलू सहायिका को CCTV फुटेज में बर्तनों पर पेशाब छिड़कते हुए पकड़ा
➡️10 वर्षों से उसी व्यापारी परिवार के घर में कर रही थी काम
➡️परिवार को… pic.twitter.com/0tLakXshEi— डाइनामाइट न्यूज़ हिंदी (@DNHindi) August 22, 2025
“>
புகாரின் பேரில் போலீசார் அவள்மீது பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு காஜியாபாத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பணிப்பெண் உணவில் சிறுநீர் கலந்தது கேமராவில் பதிவாகி கைது செய்யப்பட்டிருந்தார். பிஜ்னோரிலும் அதேபோன்ற நிகழ்வு நடந்து இருப்பதால், சமூக வலைதளங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
