உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் மனதை உலுக்கும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபின் குப்தா என்ற நபர், தனது பிறந்த குழந்தையின் உடலை பையில் சுமந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். காரணம் என்ன தெரியுமா? அவரது மனைவி ரூபி கர்ப்பிணியாக இருந்த நிலையில், மருத்துவமனை சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால் கரு உயிரிழந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விபின் குப்தா கூறியதாவது – “நான் ரூ.8,000 ரொக்கமாக கொடுத்தேன். மீதத்தொகையை விரைவில் தருவதாகச் சொன்னேன். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் ‘இது சந்தை இல்லை’ என்று கூறி சிகிச்சையை புறக்கணித்தனர். பிறகு என் மனைவியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர். பின்னர், மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, தவறான மருந்து காரணமாக கரு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” எனத் துயரத்துடன் கூறியுள்ளார்.

“>

 

தனது மனைவி தொடர்ந்து “குழந்தை எங்கே?” என்று கேட்கிறார், அதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கண்கலங்கினார். இந்த துயர சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

தகவல் கிடைத்ததும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ் குப்தா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று நேரடியாக விசாரணை தொடங்கியுள்ளார். இந்த அலட்சிய சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.