சமூக வலைதளங்களில் பல திறமையான நபர்களின் வீடியோக்கள் அடிக்கடி பரவுவதுண்டு. அந்த வகையிலா ஒரு சிறுவன் தனது டாப்பா ஸ்டைல் நடனத்தால் இணையத்தை புரட்டிவிட்டான்.
ஒரு பாரம்பரிய குஜராத்தி நிகழ்ச்சியில், கர்பா மற்றும் தாண்டியாவை கலந்தடித்து நடனம் ஆடுகிற குழுவில், அந்த சிறுவன் தனக்கே உரிய அதிரடியான ஸ்டைலில் நடனம் ஆட, அனைவரின் கவனமும் அவன் மீது செல்லும் வழியில்லை. வேகமாக சுழன்று, ஆச்சரியப்படுத்தும் அதே நேரத்தில் கவர்ந்திழுக்கும் நடனத்தை அப்படியே காட்டி விட்டான்.
Bro forgot he is a human being. ☠️ pic.twitter.com/8rfUc9gLlM
— The Hawk Eye (@thehawkeyex) August 19, 2025
“>
இந்த வீடியோவில் அந்த சிறுவன், ஒரு டாப்பா போல் சுழன்று சுழன்று, பல தடவைகள் தொடர்ந்து நடனம் ஆடுகிறான். ஒரே நேரத்தில் அவனோட குழுவினர் ஆச்சரியத்தில் உறைந்திருக்க, பார்வையாளர்களோ “ இப்படி ஒரு மிரட்டல் வேகத்தில நடனம் ஆடறதுலே, நிச்சயம் அவன் ஸ்பெஷல்! என்று பாராட்டிவருகின்றனர்.
இந்த வீடியோ X-இல் @thehawkeyex என்ற பக்கத்தில் பகிரப்பட்ட உடனே, பலரும் பகிர்ந்து, லைக் பண்ணி, கமெண்டில் பாராட்டி வருகிறார்கள். சிறுவனின் இந்த டேலண்ட் பாராட்டத்தக்கது என்பதில் மாற்றமில்லை. உண்மையில், அவன் நடனம் கண்டிப்பா ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கும் விதத்தில் இருக்கிறது!
