சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் பல இருந்தாலும், சில வீடியோக்கள் மட்டும் மக்கள் மனதை கவர்ந்து பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அதுபோல ஹரியானாவில் இருந்து வந்த ஒரு பெண்ணின்  டான்ஸ் வீடியோ இணையத்தில் பட்டாசு போல வெடித்துக் கொண்டிருக்கிறது. ‘ ஹரியான்வி பாடலுக்கு DJ தாளத்தில்  காட்டுத்தனமாக நடனமாட, பார்த்தவர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இந்த வீடியோ மே 1 அன்று Instagram-இல் @yog.mayapal என்ற கணக்கில் பகிரப்பட்ட நிலையில், இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் அடித்துள்ளனர். வீடியோவை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை போட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Yogmaya Pal (@yog.mayapal)

“>

“பழைய வீரர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளாரே, “இந்தப் பெண்ணை தூண்டியவர் பெரிய பாவம் செய்திருக்கிறார்” என்று மற்றொருவர் சிரிப்புடன் கமெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் சூடான ட்ரெண்டாகி வருகிறது.