விலங்குகள், குறிப்பாக நாய்கள், தங்கள் உரிமையாளர்களுக்கும், துணைகளுக்கும் காட்டும் விசுவாசம் அனைவரையும் எப்போதும் ஆச்சரியப்படுத்துகிறது. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று உள்ளது.
இதில், சாலையில் உயிரிழந்த தனது துணையை மீண்டும் உயிர்ப்பிக்க முயலும் நாயின் காட்சி, பார்ப்பவர்களை கண்ணீர் மல்கச் செய்துள்ளது. தினேஷ் பிரீதிவ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
View this post on Instagram
“>
வீடியோவில், ஒரு நாய் தனது துணை சாலையில் அசைவின்றி கிடக்க, அவளை எழுப்புவதற்காக தொடர்ந்து முயற்சிக்கிறது. தன் காலால் மெதுவாகத் தட்டுகிறது, மூக்கால் தள்ளுகிறது, சில நேரங்களில் குரைத்து அழைக்கிறது. ஆனால் எவ்வளவு முயன்றும் பதில் கிடைக்காததால், அதன் மனவேதனை உச்சத்திற்கு சென்றது.
அந்த நாயின் உதவியற்ற அழுகை குரல், மனிதர்களின் இதயத்தையே உருகச் செய்கிறது. தனது துணை இறந்துவிட்டதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறும் அந்த நாயின் நிலை, விலங்குகளின் உணர்வுகள் எவ்வளவு ஆழமானவை என்பதை காட்டுகிறது.
