டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான பெண் ஒருவர், தன்னை வாலிபர் நிராகரித்ததால் அவரது வீட்டிற்கே நேரில் சென்று காதல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்த வினோதமான விபரீதம் தற்போது சோசியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ‘பம்பிள்’ (Bumble) டேட்டிங் ஆப் மூலம் 30 வயதான ரூத் (Ruth) என்ற பெண்ணுடன் பழகி, தங்களது முதல் சந்திப்பாக காபி குடித்துவிட்டு ஜிம்மிற்குச் சென்றுள்ளனர்.
அந்தச் சந்திப்பின் போது, ரூத் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்தானது என்றும், தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் உண்மைகளைக் கூறவே, தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று நினைத்த அந்த வாலிபர், வீட்டிற்கு வந்ததும் “உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி, ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை” என்று நாகரிகமாக மெசேஜ் அனுப்பி நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஒரே இரவில் 10 முறைக்கும் மேலாகப் போன் செய்து சண்டை போடவே, வாலிபர் அவரது நம்பரை பிளாக் செய்துள்ளார்; ஆனால் விடாத அந்தப் பெண், அடுத்த நாள் தனது நண்பர்களின் எண்களில் இருந்து 20 முறைக்கு மேல் மிஸ்டு கால் கொடுத்து மிரட்டியுள்ளார்.
இந்த டார்ச்சர் இத்துடன் நிற்காமல், அடுத்த நாள் காலை அந்த வாலிபரின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வாசலில் நின்று தேடியதோடு, வாலிபரின் அம்மா அவர் வீட்டில் இல்லை என்று சொன்னதும், ஒரு கையெழுத்துக் கடிதத்தை வாசலில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதில், “நான் ஒன்றும் ஸ்டாக்கர் (Stalker) கிடையாது, என் நண்பர்கள் மூலமாக உன்னுடைய வீட்டு முகவரியைக் கண்டுபிடித்தேன், எனக்கு நீ ஏன் வேண்டாம் என்று சொன்னாய் என்கிற விளக்கம் மட்டுமே வேண்டும்” என்று எழுதியிருந்தது அந்த வாலிபரை ஒட்டுமொத்தமாகப் பயத்தில் உறைய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தற்போது ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் அந்த வாலிபரால் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் பழகும் போது சொந்த விபரங்களையும், வீட்டு முகவரியையும் பகிர்வதில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
