பாகிஸ்தானில் வசித்து வரும் நபர் ஒருவர் கார் இல்லாத குறையைப் போக்குவதற்காகத் தனது பைக்கின் பின்னால் பெரிய கயிற்றுக் கட்டிலைக் கட்டி, அதில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அமர வைத்து ஆபத்தான முறையில் ரோட்டில் வலம் வந்துள்ள வினோத ‘ஜுகாட்’ (Jugaad) வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஷாஹித் (shahid.akram.566) என்ற பயனர் பகிர்ந்துள்ள வீடியோவில், போக்குவரத்து விதிகளையும் போலீசாரையும் துளியும் மதிக்காமல் அந்த நபர் ஆபத்தான ஸ்டண்ட் செய்துள்ளார். பைக்கின் பின் சீட்டில் ஒரு முழு கட்டிலைப் பக்கவாட்டில் கட்டி, அதில் குடும்பத்தினர் அனைவரும் ஏதோ பொழுதுபோக்கு பூங்காவின் ராட்டினத்தில் அமர்ந்திருப்பது போல ஜாலியாகக் காற்றில் பறந்தபடி பயணம் செய்கிறார்கள்.
View this post on Instagram
“பாகிஸ்தான் என்பது பிகினர்களுக்கான (Beginners) நாடு அல்ல” என்று உருது கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதோடு, 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதைப் பார்த்த இணையவாசிகள் “வறுமை மனிதனை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது” என்றும், “வாழ்க்கையில் இந்த பைக் காரரைப் போல ஒரு பேலன்ஸ் (Balance) வேண்டும்” என்றும் கமெண்ட்டுகளில் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.
பார்ப்பதற்குச் சிரிப்பை வரவழைத்தாலும், எந்த நேரத்திலும் பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆபத்தான ஏழைமை காலத்து அலட்சியப் பயணம், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
