டிஜிட்டல் இந்தியாவின் அசாத்திய வளர்ச்சிகளுக்கு இடையே, ஆன்லைன் உணவு டெலிவரியில் அரங்கேறியுள்ள ஒரு நூதன மோசடி சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜொமாட்டோ ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியர் உணவைக் கதவின் அருகே வைத்துள்ளார்.
பின்னர், உணவு டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான ஆதாரத்திற்காகத் தனது மொபைலில் அதனைப் புகைப்படம் எடுத்துவிட்டு, வாடிக்கையாளர் கதவைத் திறப்பதற்குள் அந்த உணவை மீண்டும் கச்சிதமாகத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த அதிர்ச்சி தரும் மோசடி காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
<a href="http://
खाना डिलीवर भी हो गया और मिला भी नहीं! 😭
कोलकाता की घाटना है ज़ोमैटो डिलीवरी वाले ने पहले खाना दरवाजे पर रखा डिलीवर प्रूफ के लिए फोटो ली और फिर चुपचाप खाना उठा कर चलता बना!
डिजिटल इंडिया में अलग ही लेवल का फ्रॉड चल रहा है भाई! pic.twitter.com/zPOZDbu0lf
— Tanu (@ytanu7028) June 22, 2026
“>
“டிஜிட்டல் இந்தியாவில் பிராடு தனம் தற்பொழுது அடுத்த லெவலுக்குச் சென்றுவிட்டது; டெலிவரி போட்டோவை நம்பி ஏமாற வேண்டாம்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜொமாட்டோ நிறுவனத்திற்குப் புகார்கள் குவிந்து வருகின்றன.
