94 வயதான கொன்றகுண்டா மகாலட்சுமம்மா என்ற ஆந்திரப் மூதாட்டி, கடந்த 2000-ம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்று சுமார் 18 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து வந்தார். சொகுசான வாழ்க்கை, வசதிகள் என அனைத்தும் இருந்தபோதிலும், தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியில் தனது தாய்நாடான இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள் தீவிரமாக எழுந்துள்ளது. 95 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், தனது இறுதி மூச்சு இந்திய மண்ணில்தான் பிரிய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அவர் அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்துவிட்டு தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
தற்போது ஆந்திராவில் உள்ள மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மகாலட்சுமம்மா, “கலெக்டர் காரு, எனக்கு 95 வயதாகப் போகிறது, என் தாய்நாடான இந்தியாவில் எனது இறுதி நாட்களைக் கழிக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை” என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தனது இறுதிச் சடங்குகள் தனது சொந்தக் கிராமத்திலேயே நடக்க வேண்டும் என்றும், அதற்காகத் தனக்கு மிக விரைவில் இந்தியக் குடியுரிமை கிடைக்க உதவி செய்யுமாறும் அதிகாரிகளிடம் கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
BIG NEWS 🚨 94-year-old Andhra woman gives up US citizenship.
"Collector garu, I am nearing 95 years of age"
"My only wish is to spend my final days in my motherland India" 🥹
"I want my last rites to be performed in my native village"
"Please help me obtain Indian… pic.twitter.com/D1CiTzYE8D
— News Algebra (@NewsAlgebraIND) June 26, 2026
ஒரு இந்தியராகவே இறக்க வேண்டும் என்ற அந்தப் பாட்டியின் ஆகச்சிறந்த தேசப்பற்றும், உருக்கமான வார்த்தைகளும் தற்போது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் நெகிழ வைத்து வைரலாகி வருகிறது.
