கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன்- 2” படத்தின் சூட்டிங் தற்போது திருப்பதியில் நடந்து வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடந்து முடிந்துள்ளது. திருப்பதி சுற்றுவட்டாரத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. திருப்பதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியன் 2 சூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருப்பதியில் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங் இடையிலான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது பற்றி நடிகை ரகு பிரீத் சிங், இந்திய சினிமா கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகிய ஜாம்பவான்களுக்கு சொந்தமானது என கூறி இருக்கிறார். மேலும் ரகு பிரீத் சிங் கூறியிருப்பதாவது “கமல்ஹாசன் உடன் நடிப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. கமலுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும் அதிர்ஷ்டமான ஒரு நிகழ்வாக நினைக்கிறேன் என அவர் கூறினார்.