கோலிவுட் வட்டாரத்தில் தினசரி வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். உலக அளவில் பார்க்கும்போது துணிவு திரைப்படத்தை விடவும் வாரிசு அதிகமான வசூலை குவித்து வருகிறது. எனினும் சில முக்கிய இடங்களில் வாரிசு படத்தை துணிவு முந்தி உள்ளது என கூறுகின்றனர்.
சென்ற 11ம் தேதியன்று வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் இதுவரை தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் துணிவு படம் இதுவரையிலும் ரூ. 106 கோடி வசூல் செய்து உள்ளது. அதேபோல் வாரிசு திரைப்படம் ரூபாய்.105 கோடி வரையிலும் வசூல் செய்து சற்று பின்தங்கி இருக்கிறது.