அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் இப்போது தியேட்டர்களில் நல்ல வசூல் சாதனை படைத்து ஓடிகொண்டிருக்கிறது. இதையடுத்து அஜித் தன் அடுத்த படமான AK-62-ல் நடிக்க போகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படம் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த நிலையில் அஜித் தற்போது தன் அடுத்த படத்திற்காக தற்போதே கதை கேட்க தொடங்கி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, அஜித் ஒரு முக்கிய இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் உடன் தான் அஜித் மீண்டும் கூட்டணி சேர பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம்தான் இந்த அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.