பிக் பாக்ஸ் டைட்டிலை விக்ரமன் பெற்றுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 பைனலில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இதில் சிவின், அசீம், விக்ரமன் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு கதிரவன், அமுதவாணன் வெளியேறி விட்டார்கள். மேலும் இடையில் மைனா நந்தினி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் டைட்டிலை விக்ரமன் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமனுக்கு தொடக்கத்திலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் அவர் டைட்டில் வெல்லுவார் என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அவருக்கு டைட்டில் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.