டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்டில் யோகிபாபு, இனியா நடிக்கும் திரைப்படம் “தூக்குதுரை”. இத்திரைப்படம் 3 விதமாக, அதாவது 19ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடப்பது போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பாலசரவணன், சென்றாயன், மாரி முத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

இப்படத்துக்கு கே.எஸ். மனோஜ் இசையமைக்க, ரவி வர்மா கே ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. “தாறுமாறு ஸ்டார்ஸ்” எனும் அப்பாடலை “தேவராளன் ஆட்டம்” புகழ் யோகி சேகர் பாடி உள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.