அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கும்போது, ஊழியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி தப்பிக்க முயல்வது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து நீதிபதிகளும் கூட கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தமிழகத்திற்கே முன்னுதாரணமாக ஒரு அதிரடி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் தாங்கள் கொண்டுவரும் பணத்தை “தனிப்பட்ட பதிவேட்டுப் பணம்” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் தினந்தோறும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைச் சம்பந்தப்பட்ட மேற்பார்வை அதிகாரிகள் தீவிரமாகப் பின்பற்றுவதோடு, அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்குத் தேவையின்றி அதிகளவில் பணத்தைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் முன்னோடியாக அமைந்துள்ள இந்த அதிரடிச் சுற்றறிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிற்கே முன் உதாரணமாக சுற்றறிக்கை அனுப்பிய கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப்: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது அடிக்கடி ஊழியர்களிடம் கணக்கில் வராத பணம் பிடிபடுகிறது. அவ்வாறு பணம் பிடிபடும் பட்சத்தில் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை வைத்திருந்ததாக… pic.twitter.com/e1rTmPBDXY
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 30, 2026
“>
அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைத் தடுக்கவும் ஆட்சியரின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
