மக்கள் தலைவர் அய்யா ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவஞ்சலி நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழக்கத்தை முதன்முதலில் அங்கீகரித்து ஊக்கமளித்த மாபெரும் தலைவர் அய்யா மூப்பனார் அவர்களின் நினைவிடத்தில் விசிக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் உத்தரவுக்கிணங்க, அய்யா ஜி.கே. மூப்பனார் நினைவிடத்தில் விசிகவினர் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.

“>

 

இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அன்புச் சகோதரருமான ஜி.கே. வாசன் அவர்கள் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு அய்யா மூப்பனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவிப் புகழாரம் சூட்டினர்.