கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தேன்கனிக்கோட்டை அடுத்த கக்கதாசம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004-ஆம் ஆண்டு இதே கிராமத்தில்தான் நான் அரசு மருத்துவராக எனது பணியைத் தொடங்கினேன்; அன்று நான் பணியாற்றிய அந்த நாடுகள் எனது நினைவில் பசுமையாக வந்து சென்றன.
அப்பகுதி மக்கள் இன்றும் என்னை அதே அன்போடு வரவேற்றதுடன், பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடன் பணியில் இருந்த பழைய சக ஊழியர்களைச் சந்தித்துப் பேசியது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. உணவு விடுதிகள் கூட இல்லாத அந்தக் காலத்தில், ஐந்தரை ஆண்டுகள் அங்கேயே உள்ள மருத்துவர் குடியிருப்பில் தங்கி மக்களுக்கும் மருத்துவச் சேவை செய்தது இன்றளவும் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்வதே எனது முதன்மையான லட்சியமாகும்; கிராமத்து மக்களின் தேவைகளையும் அவர்களின் வலிகளையும் நேரில் புரிந்து கொள்ள அந்த நாடுகள் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
இன்றைய தினம் நமது கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக தேன்கனிக்கோட்டையை அடுத்த, கக்கதாசம் ஊராட்சியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
22 ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு இதே கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில்… pic.twitter.com/aP93ewVRyI
— Arunraaj TVK (@arunraajkg) August 29, 2026
“>
தொடர்ந்து மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றுவேன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அங்கு மரக்கன்று நட்டதோடு, இந்தச் சேவையைச் செய்ய வாய்ப்பளித்த காலத்திற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
