கங்கனா ரனாவத் எமர்ஜென்சி எனும் திரைப்படத்தை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்துக்காக தன் அனைத்து சொத்துகளை அடமானம் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கங்கனா ரனாவத் கூறியதாவது, “இந்த படத்திற்கான சூட்டிங்கை முடித்துவிட்டேன். இது என் வாழ்க்கையின் பெருமையான தருணம் ஆகும். எனினும் படத்தை சுகமாக முடித்துவிடவில்லை.
படப்பிடிப்பை ஆரம்பித்த போது எனக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்து படத்தை முடிக்க என் அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறு பிறவி மாதிரி. நான் கூற விரும்புவது என்னவெனில் உங்களது கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக உள்ளேன் என்பதை என் மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.