நடிகர் ராதாரவி ஆரம்பக்காலங்களில் நாடகங்களில் நடித்து பிறகு கமல்ஹாசனின் மன்மத லீலை படம் வாயிலாக திரையுலகில் அறிமுகமானார். இவர் டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா திரைப்படத்தில் முதன் முறையாக வில்லன் வேடம் ஏற்றார். அதோடு சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 500 திரைப்படங்களுக்கு மேல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராதாரவி.

தற்போதைய இளம் கதாநாயகர்கள் உடன் இணைந்தும் ராதாரவி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராதாரவி புது வித்தியாசமான தோற்றத்தில் தன்னை புகைப்படம் எடுத்து உள்ளார். அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராதாரவி ஹாலிவுட் நடிகர் போல உருமாறி உள்ளதாக பாராட்டி வருகின்றனர்.