
சீன ராணுவம், தைவான் நாட்டைச் சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போரை தொடர்ந்து சீன நாட்டிலிருந்து பிரிந்த தைவான், தங்களை தனி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும், சீனா, தைவான் நாட்டை மீண்டும் தங்களுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தைவானை தங்களுடன் சேர்த்துக் கொள்வதற்காக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், அடிக்கடி போர் விமானங்களை தைவானுக்கு அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தைவானை சுற்றி போர் பயிற்சி மேற்கொள்ள நேற்று ஒத்திகையில் ஈடுபட்டதாக சீன ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாம் தடவையாக போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.