“தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய வியூகங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK + INC + VCK + IUML + CPI + CPM) முதல் அதிகாரப்பூர்வ ராஜ்யசபா எம்பி (MP) வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டு இருப்பது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி, ‘இந்தக் கூட்டணியின் முதல் எம்பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை என் வாழ்வின் பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்; என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாகத் தான் என்றும் ஒலிப்பேன் என லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு நெஞ்சார உறுதி அளிப்பதாக அவர் எக்ஸ் தள பதிவுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ க்கு மனமார்ந்த நன்றி
தேர்ந்தெடுக்கப்பட்ட… https://t.co/ANU7I6s5bf pic.twitter.com/CoFBdgwmVr
— Praveen Chakravarty (@pravchak) June 5, 2026
“>
