பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கிறார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிபர் போல்சனேரோ அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இதனைத்தொடர்ந்து நாட்டின் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தினர். ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்றத்தின் வளாகத்தின் முன்புறம் திரண்டு புதிதாக பதவியேற்ற அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரேசில் நாட்டின் பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் பிரேசில் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல் மற்றும் அமைதியாக அதிகாரத்தை மாற்றுவதை கடுமையாக கண்டிக்கிறேன். அந்நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறோம். பிரேசில் நாட்டின் புதிய அதிபர் தொடர்ந்து பணிபுரிய ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்