செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நியாயமா அழைப்பானை கொடுத்து விசாரித்து இருக்க வேண்டியது என்னைதான் . என்னை விட்டுட்டு எனக்கு தெரியாம என் கட்சியில என்ன நடக்கும் ?  கட்சியை வழி  நடத்தி போற ஆளு நான் தான். அதுக்கு முழு பொறுப்பு நான்தான். சின்ன சின்ன பிள்ளைகள்…  அதுவும் தம்பி துரையாவது  ஒரு youtube வச்சிருக்கான். ரெண்டு,  மூணு தடவை சிறைக்கு போயிட்டான்.

மதி  கொஞ்சம் பெரிய பையன்…. கார்த்திக் எல்லாம் என்ன பண்ணுனான் ?  விஷ்ணு இருக்கான் பாருங்க…  தென்னகம் விஷ்ணு… அவன் எல்லாம் எங்க கிராமம்… எங்க கிராமத்துல போய் 50 , 100 காவல்துறையை குவிச்சு NIA என சொல்லி, ஒன்னும் இல்லாம போய் கலைச்சி போட்டுட்டு,, ஐயா நெடுமாறன் அவர்கள் எழுதின பிரபாகரன் எழுச்சியின் வடிவம் இருக்குல்ல அந்த புத்தகம் எடுக்குறாங்க அண்ணே என சொன்னான்…

கொடுத்துவிடுடா அப்படியாவது படிச்சி தெறிச்சிக்கட்டும் கொடுத்துவிடுடா என  சொன்னேன். வேற ஒன்னும் இல்ல.  இதுக்கு ஒரு சும்மா அச்சுறுத்தி பார்க்கிறது தான். NIA சோதனையை ரொம்ப நாளாவே நான் சொன்னேன்…  அவங்க என்னதான் குறி வைப்பாங்கன்னு நெனச்சேன் அப்படி தொட்டு தொட்டு வருவாங்க.

அமித் ஷா  பாராளுமன்றத்தில் பேசினது காணொளியில இருக்கு. இது இஸ்லாமியர்களுக்கு,  தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் சொன்னது இருக்குது. அவங்க நேர என்னதான் குறி வைப்பாங்க. தேர்தல் நேரத்தில் என்னை தூக்குவாங்க. அது உங்களுக்கு தெரியும்…  அவுங்க கால் வச்சி நகருவதற்கு எவ்வளவு தூரம் நான் தடையாக இருப்பேன் என தெரியும், அதான் தொடுவாங்க,  அது எதிர்பார்த்ததுதான் என பேசினார்.