என் மன் என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு  தொலைநோக்கு பார்வையில்லை,  விவசாயிகள் ஒரு  கஷ்டப்படுகிறார்கள். நீங்க கஷ்டப்பட்டு மாம்பழத்தை கொண்டு வந்து…  இங்கிருந்து பக்கத்துல இருக்குற பெங்களூருக்கோ, சென்னைக்கோ ஏதோ ஒரு பெரிய ஊருக்கு அனுப்பி,  ட்ரெயின் மூலமாக இந்தியா முழுவதும் அனுப்பிட்டு இருக்கீங்க…

உங்க மாம்பழம் என்பது இந்தியா முழுவதும் போகும். ஆனால் உள்ளூரில் அந்த மாம்பழத்தினுடைய உற்பத்தி திறன் இன்னும் சரியாக பயன்படுத்தி,  தொழிற்சாலைகளை ஆரம்பித்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து…  விவசாயம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற ஒரு சிறிய எண்ணம் கூட இல்லாத கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதை தாண்டி வரும்போது நிறைய நம்முடைய விவசாயிகள் பெருமக்கள் கோரிக்கை வைத்தார்கள்…

நம்ம ஊரில்  அதிகமான  இடத்திலும் பார்த்தீங்கன்னா….  பனை  மரம் அதிகமாக இருக்கிறது. அந்த பனைமரத்துக்கு நீங்கள்  குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாரதிய ஜனதா கட்சி இன்னும் குரல் கொடுங்கள் என சொன்னாங்க.. தமிழகத்தில் நாம் ஒருவர் மட்டும்தான்… நம் கட்சி மட்டும் தான் தெளிவாக இருக்கின்றோம், 

டாஸ்மார்க் கடையை பாரதிய  ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், மூன்று  வருடத்திலே படிப்படியாக இழுத்து மூடி விடுவோம். முதல் வருடம் 25 சதவீதம்…. இரண்டாவது வருடம் 25 சதவீதம்….. மூன்றாவது வருடம் 50 சதவீதம். அதே நேரத்துல மூன்று வருடத்தில் படிப்படியாக கள்ளுக்கடைகளை திறந்து வைப்போம் என தெரிவித்தார்.