கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் வரதராஜ மன்னர் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கிறார்.

இந்த படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்கும் நிலையில், செப்டம்பர் 28-ஆம் தேதி இப்படம்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு சலார் படத்தின் சூட்டிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‌