தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த வாத்தி திரைப்படம் அண்மையில் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். ‌ இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக ஒரு புது தகவல் வெளி வந்துள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து திரிஷா கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக தற்போது திரிஷா லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.