தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா லட்சுமி இருக்கிறார். இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் மற்றும் கட்டாகுஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா ஒரு நடிகையாக மாறுவதற்கு அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்பிபிஎஸ் படித்துவிட்டு டாக்டராக பயிற்சி எடுக்கும் போதே நடிகையாக ஐஸ்வர்யா ஆனார். அவரின் பெற்றோர் நடிப்பதை ஒரு மரியாதைக்குரிய தொழிலாக நினைக்கவில்லை என்பதால் அவர் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிறது என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.