தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும், கனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் சர்வானந்த். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியை தற்போது கரம்பிடித்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில்சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் தெலுங்கு முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தெலுங்கு திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.